Here’s to a heroic mum and dad so committed to their VBAC (vaginal birth after cesarean )that they had not one but so many hurdles to cross Was it their travel for their cause to have a natural birth from another state? Was it going on Loss of pay so that his wife could achieve what she always wanted right from her first birth? Was it waiting till day 5 after the waters had been released? Their simplicity and humbleness have blown us away. One of the most beautiful moments was when after the birth when we remarked how radiant the mother looked and all the proud dad could say “she looks just as fresh as the day I met her first” Some birth posts flow best when written in their own vernacular language. So here’s a beautiful one in Tamil. #vbac#birthvillage#gentle births#midwifery care என்னுடைய பெயர் இராஜலக்ஷ்மி இரமேஷ். முதலில் எங்களைப் பற்றிய ஒரு சிறிய முன்னுரை. நான், இரமேஷ் மற்றும் மேகா ஆகிய மூன்று பேர் கொண்ட சிறிய குடும்பம.வாழ்வது சென்னையில். முதல் குழந்தை போதுமான வளர்ச்சி இல்லாததால் 3-ஆவது மாதத்தில், மருத்துவரின் ஆலோசனையின் கீழ் D&C செய்தோம். அதன் பின் அடுத்த குழந்தை(மேகா), 2014, செப்டம்பர் 23ஆம் தேதி அறுவை சிகிச்சை(Cesarean) மூலம் வந்தாள். அதன் பின், மீண்டும் அடுத்த குழந்தைக்கு நாங்கள் தயாரானோம் மூன்றாவது மாதம், என்னுடைய உறவுக்கார அண்ணன் மூலம் நாங்கள் அறிந்து கொண்ட ஒரே செய்தி, “எர்னாகுலத்தில் natural birth center ஒன்று இருக்கிறது, அங்கே சென்றால் சுகப்பிரசவம்(Normal delivery) என்பது உறுதி”. அதன் பெயரும் தெரியாது. இணையத்தில் தேடினோம். Birth Village பற்றிய தகவல் கிடைத்தது. முடிவெடுத்துவிட்டோம் இனி இந்தக் குழந்தையின் பிறப்பு இங்கேதான் நிகழ வேண்டுமென்று. 36ஆவது வாரம், எர்னாகுளம் வந்தடைந்தோம். பனம்பில்லி நகரில் இரண்டாவது மாடியில் வீடு(No lift available. We hesitated to have this house due to this reason. After that it became a good reason for us to have as stepping exercise). நாங்கள் குடியிருக்கும் இடத்திற்கு அருகில்தான் டோனாவின் Dance class. அதனால் எனக்கு Dance class போவதும் ஒரு நடைப்பயிற்சியாக இருந்தது. Lamaze வகுப்புகளும் நடந்தன. நாட்களும் கடந்தன. 40ஆவது வாரம், அந்த சமயத்தில் இரவு நேரங்களில், படுத்திருந்த நிலையில் மட்டும் என்னால் குறைந்தளவு வலியினை(False Labour) உணர முடிந்தது. ஜீலை 23, 2016 எனது கணவரும் வந்து சேர்ந்தார். Mom & baby pack list-இல் இருந்த பொருட்களை ஒரு பையில் எடுத்து வைத்து தயாராக வைத்துக் கொண்டோம். பிரசவ நேரத்தில் கேட்க எனக்குப் பிடித்த பாடல்களை pendrive-இல் எடுத்து வைத்துக் கொண்டோம். நாங்கள் water birth தேர்வு செய்திருந்ததால் அதற்கான பொருட்களையும் பையினுள் வைத்திருந்த்தோம்.(பின்பு பாட்டுக்கும், Waterbirth-க்கும் தேவையில்லாமல் போனது வேறு கதை). என்னுடைய Due date ஆக ஜூலை 29, 2016 கணிக்கப்பட்டிருந்தது. எதிர்பார்ப்பு ஏமாற்றமே தந்தது. ஆனால் நடைப் பயிற்சியும், மாடிப்படி ஏறி-இறங்கும் பயிற்சியும், நடனப் பயிற்சி வகுப்பும் தொடர்ந்தது. ஏனென்றால் BirthVillage-இல் நாங்கள் பார்த்த வாசகங்களில் ஒன்று எங்களை மிகவும் ஊக்கப்படுத்தியது. அது பின்வருமாறு, “We are the only species of mammals that can doubt it’s capacity to give birth. Think about that.- Ina May Gaskin” பயிற்சியின் தீவிரம் அதிகமாகியது. ஆகஸ்டு 1, 2016, மாலை 4:15 மணிக்கு முதல் மாற்றம். Mucus plug வெள்ளை நிறத்தில் வெளியேறியது. அன்று இரவு மாதவிடாய் வலி போல் சற்று அதிகமாகியது, இரவு 2:00 மணி, பின் அடுத்த நாள் காலை 5:10 முதல் மாலை 5:00 மணி வரை வலி தொடர்ச்சியாக இல்லாமலும், கால இடைவெளி கூடியும், குறைந்தும் சீராக இல்லாமல் (36 sec, 10 sec, 1min, etc) இருந்தது. இருந்தும் நாங்கள் எழுதிவைக்க ஆரம்பித்தோம். பிரியங்காவிற்கு அனுப்பினோம். என்னை சீக்கிரம் தூங்கச் செல்லுமாறும், நல்ல ஓய்வு எடுக்க வேண்டியும் அறிவுறுத்தினார். ஆகஸ்டு 3, 2016, புதன்கிழமை, காலை தேனீர் அருந்தும்பொழுது என்னுடைய nightie பனிக்குட நீரால் ஈரமானது.அதன் பின் எங்களுக்கு weekly checkup, daily checkup ஆக மாறியது. ஆகஸ்டு 4, 2016, வியாழக்கிழமை checkup-இல் குழந்தை வலதுபுறம் திரும்பிவிட்டதாக டோனா சொன்னார். அந்த மகிழ்ச்சியில், அன்று Vytilla தொடங்கி Panampilly nagar வரை நடந்தே வந்துவிட்டோம். ஆனால் எனக்கு நடக்கும் போது வலி வந்தால் அடி எடுத்து வைப்பதில் சிரமம் ஏற்பட்டது. இருந்தாலும் நின்று நின்று வந்துவிட்டோம். ஒவ்வொரு நாளும் எனது வலி மாறுவதை என்னால் உணர முடிந்தது. வலி வரும்போதெல்லாம், இது ஒரு வலி அல்ல. இன்னும் வேண்டும், நாம் கண்டிப்பாக சுகப்பிரசவத்தில் குழந்தை பெற்றாக வேண்டும் என்று சொல்லித் தேற்றிக் கொள்வோம். ஆகஸ்டு 5, 2016, வெள்ளிக்கிழமை, checkup-இல் 3-4cm விரிவு ஏற்பட்டிருப்பதாக சொன்னார் பிரியங்கா. அன்று இரவு, வலி பின்புறத்தில் இருந்து முன்புறம் நோக்கி பரவ ஆரம்பித்தது. இரவு 2:00மணியிலிருந்து வலியினை குறித்து வைத்தோம். வலியானது தொடர்ச்சியாக 10 நிமிட இடைவெளியில் வந்து போனது. வலியின் நேரம், கால இடைவெளி வைத்து நாங்கள் Early Labour-இல் இருப்பதை உணர்ந்தோம். 4:00மணியளவில் 10 நிமிட இடைவெளி 5 நிமிடமாகக் குறைய ஆரம்பிக்க, பிரியங்காவை தொலைபேசியில் அழைத்துப் பேசினோம். விவரம் கேட்டுவிட்டு, நீங்கள் 5:30மணிக்கு centre-க்கு வரலாம் என்று சொன்னவுடன், நாங்கள் தயாராகிவிட்டோம். செவ்வாய்க்கிழமையே, நாங்கள் என்னுடைய கணவரின் பெற்றோரை வரச் சொல்லியிருந்தோம். அவர்களிடம் மேகாவை பார்த்துக்கொள்ளச் சொல்லி, நாங்கள் 5:45மணி, Birthvillage வந்து சேர்ந்தோம். அப்பொழுதுதான் எங்களுக்கு உயிரே வந்ததுபோல் இருந்தது. வாசலில் பிரியங்கா, தயாராக இருந்தார். வந்தவுடன் அவர் காட்டிய பரிவு, ஒரு தாயின் கரங்களில் வந்தடைந்ததாய் உணர்ந்தேன். அதற்குள் அனைத்துமே தயாராய் இருந்தது ஆச்சர்யமாய் இருந்தது. பின் அறைக்கு வந்து, ஒரு“ப” வடிவ நாற்காலியில் அமரச் சொன்னார்கள். டோனாவும், பிரியங்காவும் முன்புறம் நிற்க, பின்புறத்தில் என் கணவர் என்னைத் தாங்கிக் கொள்ள நேராக அமரச் சொன்னார்கள். பின் முக்கச் சொன்னார்கள். முக்கினேன். முடியவில்லை. மீண்டும் முயன்றேன். தலை தெரிவதாக சொன்னார்கள். நாங்கள் இருவரும் தொட்டுணர வேண்டுமா என்று கேட்டு, எங்கள் கையினைப் பிடித்து தொட்டுக் காண்பித்தார் பிரியங்கா. குழந்தையின் சிரம் தொட்டதை சிகரம் தொட்டுவிட்டதாய் உணர்ந்தோம். பின் உத்வேகத்துடன் முயற்சித்தேன். மூன்றாவது கத்தலில், குழந்தை பிரியங்காவின் கைகளில். என்னால் நம்பவே முடியவில்லை. நான் நடத்திக் காட்டியதாய், சாதித்துவிட்டதாய் சொன்னார் டோனா. அது ஆணா அல்லது பெண்ணா என்று கூட பார்க்கவில்லை. நான் குழந்தையினை வைத்திருந்த பிரியங்காவையே கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தேன். என் கணவர் தான், நமக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கின்றது என்று சொன்னவுடன் தான் தெரிந்தது நான் குழந்தை பெற்ற்விட்டேன் என்று. நாங்களே நம்பவில்லை. 5:52மணிக்கெல்லாம் நான் பெற்றெடுத்துவிட்டேன். Centre-க்குள் வந்த 7ஆவது நிமிடத்தில் குழந்தை பெற்றாகிவிட்டது. பின் என் குழந்தையினை அப்படியே என் மீதே வைத்துவிட்டு, என் கணவர் என் அருகில் இருக்க, மெதுவாக, Placenta வெளிவந்த பிறகு, தொப்புள்கொடியின் செயல்பாடு முடிந்தவுடன், என் கணவர் கையில் கத்தரிப்பனைக் கொடுத்து, அறுக்கச் சொன்னார்கள். பின் எனக்கு சில பச்சிலை சாறுகளும், பச்சைப்பயறு கஞ்சியும் அவர்கள் தர, என் கணவர் எனக்கு ஊட்டிவிட்டார். அதன் பின், குழந்தையின் செயல்பாடுகளும், என்னுடைய செயல்பாடுகளும் சீரான பின்,மாலை 3மணிக்கெல்லாம் வீட்டுக்குக் கிளம்பத் தயாரகிவிட்டோம். நான் குளித்துவிட்டு தயாரான நிலையில் என்னைப் பார்த்து என் கணவர், “இன்று நீ, நான் முதலில் உன்னைப் பெண் பார்க்க வருகையில் பார்த்ததைப் போலவே உள்ளாய்” என்று சொன்னது இந்த அற்புத அனுபவத்தை, பேரானந்தமாக்கி இன்னும் நான் நினைக்கும்போதெல்லாம் என்னை களிப்படையச் செய்கின்றது. எங்கள் இருவருக்குமே, இப்பொழுது நினைத்தாலும், அந்த நாள் எங்கள் நாட்காட்டியில் மாயமான, ஒரு இலகுவான நாளாக இருக்கின்றது. இங்கே எங்கள் குழந்தையுடன் அத்தனை கேள்விகளுக்கும், ஏக்கங்களுக்கும் எங்களுக்கு இங்கே விடை கிடைத்துவிட்டது. இப்படியொரு அனுபவத்தை அளித்திட்ட “BirthVillage”க்கும், அதன் அத்தனை உறுப்பினர்களுக்கும் எங்கள் உளமார்ந்த நன்றி!!! உங்கள் சீரிய பணி தொடரவும், மேன்மேலும் உயரவும் வாழ்த்துக்கள்.